Wednesday, August 05, 2009

நகைச்சுவை - மன்னரும் போரும்

GENERAL BLOG IN தமிழ்


"அமைச்சரே!... போர் தொடுத்து வரும் எதிரி மன்னன் அலறி அடித்துக்கொண்டு திரும்பி ஓட ஏதாவது ஒரு தந்திரம் சொல்லுங்களேன்..."!


"இது எளிது மன்னா... உங்களது மகாராணிகளை அரண்மனை வாயிலில் வரிசையாக நிறுத்தி விடுங்கள் ...அவனும் திரும்பி வரமாட்டான்... மற்றவரையும் வர விடமாட்டான்..."

நகைச்சுவை - மன்னரின் தொழில்

GENERAL BLOG IN தமிழ்




"அமைச்சரே!... நமது அரசவைக் கோமாளி அண்டை நாட்டுக்கு ஓடிச் சென்று விட்டாரா ? எதாவது கூறிவிட்டு சென்றாரா ?...




"ஆம் மன்னா!... தாங்கள் இருக்கும் இந்த அவையில் அவருடைய "தொழில்" எடுபடவில்லையாம்... புதியதாக ஒரு ஆளைப் போடாமல் இந்தத் தொழிலை வழக்கம்போல் தங்களையே கவனித்துக்கொள்ள சொன்னார்..."

தொலைக்காட்சி - நகைச்சுவை

GENERAL BLOG IN தமிழ்



" தொலைக்காட்சி பங்கு சந்தை நிபுணர், கேள்வி கேட்ட அந்த ஆளை எதுக்காக அப்படி திட்டித் தள்ளுறாரு?...


"அடிக்கடி "சென்செக்ஸ்"ன்னு சொல்றீங்களே... அது என்ன மாதிரியான செக்ஸ்ன்னு கேட்டால் திட்டாமல் என்ன செய்வாரு..."

தொலைக்காட்சி - நகைச்சுவை

GENERAL BLOG IN தமிழ்






"டீவீ வால்யூமை குறைத்து விட்டேன் சார்.. நான் பேசுறது இப்போ சரியா கேட்குதா?...




"நாங்க குறைக்க சொன்னது உங்க வால்யூமை...காதே கிழிஞ்சிடும் போல இருக்கு...?

தொலைக்காட்சி - நகைச்சுவை

GENERAL BLOG IN தமிழ்




" எங்களோட சமையல் நிகழ்ச்சியை தொலைக்காட்சியிலே பார்த்து உங்க கணவர் குடிகாரனா ஆயிட்டாரா"? எப்படிங்க?"




"நீங்கதான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் "தேவையான அளவு தண்ணிய ஊத்திக்க" சொல்றீங்களே..அதனாலேதான்"!...

புறமுதுகு - மன்னர் நகைச்சுவை

"மன்னா! வழக்கத்தை விடவும் சீக்கிரமாக போர்களத்திலிருந்து புறமுதுகு இட்டு ஓடி வந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே...!"




"ஆம் அமைச்சரே! இன்றைய எதிரி நாட்டு மன்னன் "திரும்பி பார்க்காமல் ஓடிச்செல்" என்று மிரட்டி அனுப்பி விட்டான்...அதில் கொஞ்சம் நேரம் மிச்சமாகியது...!"

வீரர்கள் போராட்டம் - நகைச்சுவை


"மன்னா!" நமது காலாட்படை வீரர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கின்றார்கள்"...


"யாரைய்யா?" அந்த நடந்துகிட்டே சண்டை போடுவானுகளே... அவனுகளா?...


"ஆம் மன்னா"!


" போராட்டத்தில் என்ன கோரிக்கை முன் வைத்திருக்கிறார்கள்?"


" அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த ஆண்டை "நடப்பு" ஆண்டாக" அறிவிக்க வேண்டுமாம் மன்னா!"...


"இனி ஒவ்வொரு ஆண்டும் "நடப்பாண்டு" என்றே அழைக்கப்படும்"... என்று அவர்களிடம் தெரிவித்து விடுங்கள்..."!

Wednesday, July 29, 2009

நகைச்சுவை - மேடை பேச்சு

"டவல் வியாபாரம் பண்ற ஆளை நம்ம கட்சி மேடையிலே பேச வெச்சது தப்பா போச்சுய்யா !"

" ஏன்யா என்ன ஆச்சு ?"

"மக்களின் துண்டே மகேசனின் துண்டுன்னு பேசி நம்ம கட்சி மானத்தை வாங்கிட்டாரு !"

Tuesday, July 28, 2009

காஸ்ட்லியான திட்டு - நகைச்சுவை

"உன்னை காஸ்ட்லியான வார்த்தையினாலே திட்டிட்டான்னு சொல்றியே ! அப்படி என்னதாண்டா திட்டினான்?"






" நீ என்ன பெரிய்ய "பருப்பா" ன்னு கேட்டுட்டாண்டா...